பிரிவுகள் Sections

மின்னிதழில் சேர

கருவிகள் › கட்டுமானச் செலவு மதிப்பீடு

கட்டுமானச் செலவு மதிப்பீடுConstruction cost estimator

கட்டடப் பரப்பும் தரமும் கொடுத்தால் தோராய மொத்தச் செலவு, பகுதிவாரிப் பிரிவு, தேவைப்படும் பொருட்களின் அளவு கிடைக்கும்.

பொருட்களின் விலையை மாற்ற · Edit material prices

ஆதாரம்: சென்னை 2026 கட்டுமானச் செலவு வரம்புகள் (infralens.in); பொருட்களின் விலை: நம்ம வீடு நவம்பர் 2026 பட்டியல். பொருள் அளவுகள் பொதுவான மதிப்பீட்டு விதிகள் (சதுர அடிக்கு: சிமெண்ட் 0.4 மூட்டை, கம்பி 4 கிலோ, மணல் ~0.08 டன், ஜல்லி 1.35 கன அடி, செங்கல் 8). உண்மையான அளவு வடிவமைப்பைப் பொறுத்தது; பொறியாளரின் மதிப்பீட்டைப் பெறுங்கள்.

கேள்வி–பதில் FAQ

1,000 சதுர அடி வீடு கட்ட எவ்வளவு செலவாகும்?

சென்னையில் 2026 நிலவரப்படி நடுத்தரத் தரத்தில் சதுர அடிக்கு ₹2,310–2,835; அதாவது 1,000 சதுர அடிக்குச் சுமார் ₹23.1–28.4 லட்சம். அடிப்படைத் தரத்தில் ₹18.9–23.1 லட்சம். பிற ஊர்களிலும் வடிவமைப்பைப் பொறுத்தும் மாறும்.

சதுர அடிக்கு எத்தனை மூட்டை சிமெண்ட் தேவை?

பொதுவான மதிப்பீட்டு விதிப்படி கட்டடப் பரப்பில் சதுர அடிக்குச் சுமார் 0.4 மூட்டை. 1,000 சதுர அடிக்குச் சுமார் 400 மூட்டை. உண்மையான அளவைப் பொறியாளரின் மதிப்பீடே சொல்லும்.

சதுர அடிக்கு எவ்வளவு கம்பி (TMT) தேவை?

குடியிருப்புக் கட்டடங்களுக்குச் சதுர அடிக்குச் சுமார் 3.5–4 கிலோ என்பது பொதுவான மதிப்பீடு; கட்டமைப்பு வடிவமைப்பைப் பொறுத்து மாறும்.

இந்த மதிப்பீட்டை ஒப்பந்ததாரரிடம் சரிபார்க்க

அனுபவமுள்ள பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் பட்டியல்; கொட்டேஷன் வந்ததும் AI-யிடம் சரிபாருங்கள்.

ஒப்பந்ததாரர்கள் · Contractors கொட்டேஷன் சரிபார்ப்பு